Blog Archives

[+] இறைவன் உலகையும், உலகப் பொருட்களையும், உயிர்களுக்கான உடம்பையும் ஏன் படைத்தார்?

உயிர்களைப் பற்றியுள்ள அழுக்கை – ஆணவத்தை நீக்கி உயிர்களைப் பக்குவப்படுத்தும் பொருட்டே இறைவன் கருணையுள்ளங்கொண்டு இவற்றைப் படைத்தருளினார். Read More »

[+] ஐம்பூதங்கள் எவை?

பிருதிவி (நிலம்), அப்பு (நீர்), தேயு (நெருப்பு), வாயு (வளி), ஆகாசம் (வான்) என்பன ஐம்பூதங்களாகும். Read More »

[+] தன் மாத்திரைகள் எவை?

ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஒசை என்பன தன்மாத்திரைகளாம். Read More »

[+] கன்மேந்திரியங்கள் எவை?

வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம் என்பன கன்மேந்திரியங்களாம். Read More »

[+] ஞானேந்திரியங்கள் (ஐம்பொறிகள்) யாவை?

மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன ஐந்தும் ஞானேந்திரியங்களாம். Read More »

[+] அந்தக் கரணங்கள் எவை?

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பன அந்தக் கரணங்களாம். Read More »

[+] “முத்தி” அடைதல் என்பது என்ன?

பசு என்று சொல்லப்படும் உயிர் அஃதாவது ஆன்மா பாசத்தை விட்டு நீங்கிச் சிவத்துடன் இரண்டறக் கலந்து விடுவதற்கு முத்தி அடைதல் என்று பெயர். Read More »

[+] ஆணவம் அல்லது அகங்காரம் எப்போது ஒழியும்?

எல்லாம் அவனுடையது. அனைத்தும் அவன் செயல் என்னும் உணர்ச்சி நெஞ்சில் எப்போது வந்து குடிகொள்கிறதோ அன்று அகங்காரம் ஒழியும். Read More »

[+] பக்தி என்பது என்ன?

பக்தி என்பது இறைவனிடத்தில் செலுத்தப்படும் அன்பாகும். இறைவனிடத்தில் அன்பு ஏற்படும் போது அவரைப்பற்றிய சிந்தனை        ஏற்படுகின்றது. பக்தி முற்றமுற்ற இறைவனுடைய எண்ணம் எப்போதும் உள்ளத்தில் இருந்து கொண்டிருக்கும்.   Read More »

[+] பக்தியை வளர்த்துக்கொள்ள உதவும் சாதனங்கள் எவை?

மலர், நீர் கொண்டு வழிபடுவதும், திருமுறைகளை ஓதுவதும், அவனுக்குரிய திருமந்திரத்தை ஓதுவதுமே ஆகும்.   Read More »

Scroll To Top