Blog Archives

திசைத் தெய்வங்களை வழிபடுவதினால் ஏற்படும் நன்மைகள் யாது?

திசைகள் பத்து என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பத்துத் திசைகளையும் இறைவனின் திருவருள்தான் நின்று ஆளுகின்றது. இறைவன் திருவருள் ஆணையைப் பெற்று ஏவல் செய்யும் திக்குப் பாலகர்களும், திசைத்  தெய்வங்களும், அந்த-அந்த திசைக்கு உட்பட்டே தத்தமக்கு இட்ட பணிகளைச் செய்ய முடியும். இத்திசைத் ... Read More »

தைபூசத்தில் காவடி எடுப்பதின் நோக்கம் என்ன?

முருகன் குறிஞ்சி நிலமாகிய மலை நிலத் தெய்வம் என்பதால் மலை மீது கோயில் கொண்டிருந்தார். முருகப் பெருமானின் அடியவரான இடும்பன் என்பவர் இறைவனுக்கு அபிடெகப் பொருட்களை ஒரு கோலின் இருமுனைகளில் கட்டி தோள்களில் சுமந்துச் சென்று மலை மீது இருக்கும் அப்பெருமானைத் ... Read More »

கோயிலின் கருவறை ஏன் இருட்டாக இருக்கின்றது?

கோயிலின் கருவறை ஒலி அலைகளின் (இறை ஆற்றலை கடத்தும்) கலமாகும். விமானக் கலசம் மூலவரின் திருவுருவச் சிலைக்குச் சூரிய கதிர்களின் மூலமாகக் கிடைக்கப் பெறும் ஒலி அலைகளைக் கடத்துகிறது. மூலவரின் சிலைக்கு அடியிலுள்ள உள்ள நவரத்தினக் கற்களும், யந்திரத் தகடும் பூமிக்கு ... Read More »

வழிபாட்டில் ஏன் இறைவனுக்குத் திருவமுது வைக்கின்றோம்?

தமது கருணையினால் பொது நிலைக்கு வரும் இறைவன் ஆனந்த கூத்தாடி நம்மை ஆட்கொள்ள விழைகின்றார். இப்படி நமக்கு அருளைப் பொழிந்துக் கொண்டிருக்கின்றப் பெருமானுக்கு நம்மால் கைமாறு ஒன்றும் செய்ய முடியாது. இதனை மணிவாசகர்’யான் இதற்கு இலன் ஓர் கைமாறே’  என்கிறார். தவிர ... Read More »

இறைவன் கனவில் காட்சிக் கொடுப்பாரா?

கொடுப்பார். ஒரு சமயம் திருவீழிமிழலையில் பஞ்சம் போக்குமாறுப் பணிக்க திருஞானசம்பந்தர்,  மற்றும் அப்பர் பெருமான் கனவில் இறைவன் தோன்றினார், என்பதனை பெரியபுராணத்தில் சேக்கிழார் ’பிள்ளையார் தமக்கும் நாவுக்கரசருக்கும் கையில் மானும் மழுவுமுடன் காணக் கனவில் எழுந்தருளி… என மொழிகின்றார். பெருமானின் திருவருள் ... Read More »

திருவாதிரை சைவர்கள் கொண்டாட வேண்டிய முக்கியமான பண்டிகை என்கிறார் என் திருமுறை ஆசிரியர். திருவாதிரைப் பற்றிய குறிப்புகள் நம் திருமுறைகளிலோ, அல்லது தமிழ் இலக்கியங்களிலோ இடம் பெற்றிருக்கின்றனவா?

இடம் பெற்றிருக்கின்றன. திருஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பூம்பாவையை எழுப்புவதற்காகப் பாடிய பதிகத்தில் சைவசமயத் தொடர்பான பல விழாக்களைக் குறிப்பிட்டு அவற்றைக் ’காணாதே போதியோ பூம்பாவாய்’ எனக் கூருகின்றார். அப்பதிகத்தில் ஒரு பாடலில் ’காபலீச்சுரம் அமர்ந்தான் ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்’ என்கின்றார். ... Read More »

விநாயகப் பெருமானின் கையில் இருக்கும் மோதகம் எதனைக் குறிக்கின்றது?

இறைவன் நமக்குப் போகங்களைத் தருபவர், என்பதனைக் குறிக்கின்றது. இக்கருத்தினை, பொன்னும் மெய்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்பானைப்’ எனும் சுந்தரரின் பாடல் வரிகளோடு ஒப்பு நோக்கி மகிழலாம். Read More »

நடராச பெருமானின் திருநடனம் எதனை விளக்குகின்றது.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலும் பெருமானின் அற்புதக்கூத்தில் அமைந்துள்ளது. வலக்கையிலுள்ள (துடி) உடுக்கை ஒலியை உண்டாக்கும்; அதுவே ஓசையைக் காட்டுகின்றது. ஓசையே உலக படைப்பிற்கு அடிப்படை. எனவே இந்த உடுக்கை படைப்பு தொழிலைக் குறிக்கின்றது. மற்றோரு வலக்கை ... Read More »

பன்னிரு திருமுறைகளில் சாத்திரப் பாடல்களாக உள்ளது எது?

10-ஆம்  திருமுறை / திருமந்திரம். Read More »

திருத்தொண்டர் தொகையை அருளியவர் யார்?

சுந்தர மூர்த்தி நாயனார். Read More »

Scroll To Top